Skip to main content

‘காலிப்பணியிடங்களை நிரப்ப 824 பேர் தேர்வு’ - டிஎன்பிஎஸ்சி

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Selection of 824 candidates to fill vacancies - TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 824 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த டிசம்பர் 2023 முதல் தற்பொழுது வரையிலான காலத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு 675 நபர்களும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல் அலுவலர் நிலை நான்கு பதவிக்கு 65 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 29 நபர்களும், வனத்துறையின் கீழ் வனத்தொழில் பழகுநர் பதவிக்கு 10 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுதி நான்கு அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு 45 நபர்களும் மொத்தம் 824 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்