Skip to main content

சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி திறப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

சேலத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 19, 2019) திறந்து வைத்தார். தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் சேலம், திண்டிவனத்தில் இரண்டு தனியார் சட்டக்கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் போதிய அளவு மாணவ, மாணவிகள் சேர்க்க இயலாத காரணத்தால் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. 


இதையடுத்து, சேலம் மணியனூரில் அரசுப்பள்ளிக் கட்டடத்தில் தற்காலிகமாக அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படுவதற்கான உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) மாலையில் திறந்து வைத்தார். நடப்புக்கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு சேர்க்கையையும் தொடங்கி வைத்த அவர், விழா மேடையிலேயே 15 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:

 

 

selam law college opening ceremony tn cm edappadi palanisamy and ministers

 


தமிழகம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் சட்டக்கல்வியை ஏழை எளிய குடும்பத்தினர் பெறும் வகையில் நடப்பு ஆண்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்புக்காக 9.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று நீதித்துறையில் மின் ஆளுமைமுறை தொடங்கப்பட்டு, மின்னணு முத்திரைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக, 1188 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


சேலம் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 948 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதிய சட்டக்கல்லூரிக்கான கட்டடம் இந்த ஆண்டிலேயே கட்டப்படும். எதை சொல்கிறோமோ அதை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத வகையில், அதிக மேம்பாலங்கள் சேலத்தில் கட்டப்பட்டு உள்ளன. 

 

selam law college opening ceremony tn cm edappadi palanisamy and ministers

 

 


சீலநாய்க்கன்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதல்முறையாக மிக பிரம்மாண்டமான முறையில், சேலம் அரபிக்கல்லூரி அருகில் 66 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் அளவிற்கு சேலம் மாநகரத்தை மாற்றிக்காட்டும் அளவுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சட்டத்துறை செயலர் ரவிக்குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


கோவை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சேலம் அரசு சட்டக்கல்லூரி முதல்வராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த புதிய கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 பேரும், ஐந்து ஆண்டுகள் சட்டக்கல்விக்கு 160 பேரும் கலந்தாய்வு மூலம் சேர இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.