dfg

பெண்கள் தொடர்பாக மனுவில் கூறிய சில கருத்துகளை சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புக்கள், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவன் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "திருமாவளவன் இல்லாத ஒன்றைத் தெரிவிக்கவில்லை. மனுவில் இருப்பதை வெளியில் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த என்ன இருக்கிறது. ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு இந்த மாதிரியான போராட்டங்களை நடத்தலாமே என்ற திட்டத்தில் பாஜகவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர் கூறிய கருத்தில் தவறு இல்லை. இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அவரும் பின்வாங்கப் போவதுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment