Skip to main content

“நெல்லையில தான் சாதி தாக்கம் அதிகளவுல இருக்கு” - சீமான் ஆவேசம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

seeman says about caste issue in thirunelveli

 

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் குளிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடமிருந்து செல்போன்களைப் பிடுங்கி பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். பின்னர் இரு இளைஞர்களையும் சாதி கேட்டு, அவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் மீண்டும் அவர்களை சரமாரி தாக்குதல் நடத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துக் கொடூரமாக நடந்துகொண்டுள்ளனர். மேலும், மாலை முதல் இரவு வரை இருவரையும் வைத்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து இருவரையும் அந்த கும்பலிடம் இருந்து மீட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்ட இளைஞர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், “திருநெல்வேலி மாவட்டத்தில் தான் சாதி தாக்கம் அதிகளவில்  இருக்கிறது. சமீபத்தில் கூட பள்ளி மாணவரின் வீட்டில் புகுந்து வெட்டினார்கள். இதெல்லாம் நச்சு சிந்தனைகள். இதையெல்லாம் கடும் சட்டங்கள் மூலமாக ஒழிக்க வேண்டும். சாதிய எண்ணமே எழக்கூடாது. பள்ளிக்கூடத்திலேயே சாதி இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று சனாதன ஒழிப்புவாதிகள், சமூகநீதி காவலர்களிடம் தான் கேட்க வேண்டும்.

 

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதியின் பெயரை போடமாட்டார்கள். அதற்கு பதிலாக சாதிக்கும், மதத்துக்கும் கட்சி வைத்திருப்பார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம், பிரிந்து வாழ்வார்கள். ஆனால் ஒன்றாக செயல்படுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் சேர்ந்து வாழ்வார்கள். ஆனால், பிரிந்து செயல்படுவார்கள். இது தான் வேறுபாடு. வரவிருக்கிற தலைமுறைக்கு இந்த சாதிய நஞ்சுகள் வராத படி வளர்த்து விடவேண்டும்” என்று கூறினார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.

Next Story

“இந்தியன் 2 படம் மாதிரி 10 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சம் ஒழியாது” - சீமான்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
 Seeman spoke about indian 2 movie

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று (12-07-24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இந்தியன் 2 திரைப்படத்துள்ளார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த படத்தை எல்லோரும் பார்த்து ஆதரவு தர வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதிரி சிறந்த படைப்புகள் தொடர்ந்து வரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் கேடுகெட்டு புறையோடி அழுக்கு சமூகமாக இருக்கிற இந்தச் சமூகத்தை பழுது பார்க்கிற ஒரு கலையாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். 

இந்த மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மாறினால் தான் இந்தச் சமூகம் மாறும். ஊழல், லஞ்சம் இருக்கிற வரை இந்தப் படத்திற்கான தேவை இருக்கத்தான் செய்யுது. நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும். தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது. கோவிலில் சிறப்புத் தரிசனம் உள்ளிட்டவற்றில் இருந்துதான் லஞ்சம், ஊழல் தொடங்குகிறது. 10 படம் எடுத்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது” என்று கூறினார்.