Sealing of dyehouses for violating rules; 6 lakh rupees fine!

சேலத்தில், சாயக்கழிவுநீரைசுத்திகரிக்காமல் சாக்கடைக் கால்வாயில் திறந்துவிட்ட சாயப்பட்டறையை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூடி சீல் வைத்தது. 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisment

சேலம் கொண்டலாம்பட்டி,சீலநாயக்கன்பட்டி, கருங்கல்பட்டி,களரம்பட்டி, ஏ.ஆண்டிப்பட்டிஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாகவும், அவற்றின் சாயக்கழிவு நீர் ஓடைகளில் திறந்து விடப்படுவதாகவும் சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்திற்குபுகார்கள் சென்றன. அதன்பேரில், அதிகாரிகள் குழுவினர்சாயப்பட்டறைகளில்திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

ஏ.ஆண்டிப்பட்டிபகுதியில் உள்ள ஒருசாயப்பட்டறையிலிருந்துசாயக்கழிவு நீரை, சாக்கடை காய்வாய் ஓடையில் திறந்து விடப்படுவதும், சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சாயப்பட்டறை உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அந்த ஆலையின் உரிமையாளருக்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்கோபாலகிருஷ்ணன்கூறுகையில், ''மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், கழிவுநீரை வெளியேற்றினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும். விதிகளைமீறிசெயல்படும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். சாயப்பட்டறை உரிமையாளர்கள், சுத்திகரிப்பு நிலைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.