Skip to main content

காதலர்களிடம் பணம் பறித்த ரவுடிகளை பிடிக்கச்சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

police

 

காதலர்களிடம் தகராறு செய்த ரவுடிகளை எச்சரித்த காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழந்துள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்கரை அருகே விருதுநகரைச் சேர்ந்த காதலர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் நபர்களைத் தேடிவந்தனர்.

 

ரவுடிகள் என்ற போர்வையில் சுற்றிவந்த அந்த இருவர் பதுங்கி இருக்கும் இடத்தை நோட்டமிட்டு எஸ்.ஐ நவநீதகிருஷ்ணன், தலைமை காவலர் கந்தசாமி ஆகியோர் சென்ற நிலையில் சுதாரித்துக்கொண்ட அந்த இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அரிவாளால் போலீசாரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த போலீசார் கமுதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகள் போலீசாரை அரிவாளால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்