தமிழகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைகள் புரியும் பள்ளி மாணவிகளை தோ்வு செய்து அவா்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள கல்வி முறைகளை கண்டறியும் விதமாக ஏற்பாடு செய்கிறது.
இதில் இந்த முறை தமிழகத்தில் 50 மாணவ மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட 50 பேரையும் சுவிடன், பின்லாந்து நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். கடந்த 21ஆம் தேதி சென்ற அவா்கள் வருகிற 30-ம் தேதி இந்தியா திரும்புகிறார்கள்.
இதில் குமரி மாவட்டத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட நாகா்கோவில் எஸ்.எம்.ஆா்.வி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி உமா உட்புற காற்று மாசு பட்டால் உண்டாகும் பாதிப்பை தடுக்கும் விதத்தில் வீடுகளில் செடிகள் வளா்பதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து கண்டறிந்தார். இதற்காக இன்ஸ்பயா் விருது மற்றும் மாநில அளவில் தங்கபதக்கங்களையும் வாங்கியுள்ளார்.
வெளி நாடு செல்லும் மாணவி உமா மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஸ்வரி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.