
விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிற நிலையில், மாணவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துஆற்றைக் கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பரசுரெட்டிபாளையம்-மேட்டுப்பாளையம் இடையேயான பகுதியில் மலட்டாறு எனும் ஆறு ஓடுகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பரசுரெட்டிபாளையம்-மேட்டுப்பாளையம் இடையேயான தரைப் பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பரசுரட்டிபாளையத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நான்கு கிலோமீட்டர் சுற்றி செல்ல முடியாது என்பதால் உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் இறங்கி கடந்து வருகின்றனர். ஆபத்தான முறையில் மாணவர்கள் ஆற்றைக் கடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)