/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai444.jpg)
இடைநின்ற மாணவர்களைப் பள்ளியில் மீண்டும் சேர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர், இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத்தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (05/02/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இடைநின்ற மாணவர்களைப் பள்ளியில் மீண்டும் சேர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கரோனா காலத்தில் இடைநின்ற மாணவர்கள் மீதான நடவடிக்கை என்ன? இடைநின்ற மாணவர்கள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்பில் இருவித தரவுகள் கிடைக்கப் பெற்றது எப்படிஎன்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர்பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)