school Girl lost their life near Gudiyatham

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி. இவரது 17 வயது மகள் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார்.

Advertisment

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தந்திருந்தனர். மாணவி காணாமல் போனதை, அலட்சியமாக போலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisment

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மாணவிஉடல் மிதப்பதை இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடலைக் கிணற்றிலிருந்து மீட்டு,பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவியின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது.அவரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் எதனால் இந்த முடிவை எடுத்தார்? கொலை என்றால் எதனால்? யார்? என்று பல கோணங்களில் குடியாத்தம் நகர போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment