Skip to main content

மாணவர்களுக்கு சுவையான அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

The school education department issued a delicious announcement to the students

 

தமிழ்நாட்டில், 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 4,207 தேர்வு மையங்களில் 9,96,089 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். நேற்று துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு காலத்தையும், இந்தக் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாளையும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

அதன்படி, 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21 ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28க்குள் இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் பள்ளியின் இறுதி நாளாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்?

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Chengalpattu Olalur Govt Middle School Students incident

செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த மாணவி மற்றும் மாணவர் என இரண்டு பேர் காரில் கடத்தப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலன் என்பவரது மகன் மற்றும் மகளை காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் காரில் கடத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘விஜய் முதல்வர் ஆனால்... கோரிக்கை வைத்த மாணவரின் பெற்றோர்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
 Parents of the student who requested to vijay

நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.

இதில் பேசிய மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து அரங்கை அதிரை வைத்தார். அதில் பேசிய மாணவரின் பெற்றோர், “வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் பட்சத்தில், விஜய் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் நான் 3 வேண்டுகோளை மட்டும் முன்வைக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என உங்களிடம் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதே போல், தமிழகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்பதற்காக சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு சாதியற்றோர் என்ற அடையாளத்தை வழங்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை ஒரு குடிநோயாளிகளான சமூகமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, நீங்கள் முதலமைச்சராகப்  பதவியேற்கும் முதல்  கையெழுத்தாகத்  தமிழகம் ஒரு  மதுவற்ற  மாநிலமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு தமிழ் மக்கள் தெருவெல்லாம் உங்கள் பேச்சாக இருக்கட்டும். அதற்கு உங்கள் அறிவார்ந்த செயல்பாடுகளே எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.  தமிழ் குலம்  ஒரு நாள்  உன்னைத்  தலைமையில் அமர்த்தும் என அன்போடு வாழ்த்துகிறேன்”  எனப்  பேசினார்.

The website encountered an unexpected error. Please try again later.