ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 15 மணிநேரமாக தொடர்கிறது.

vijaya baskar

Advertisment

ஆழ்துளை கிணற்றில் மண்விழுந்ததால் சிறுவனை மீட்கும் பணி பின்னடைவு அடைந்துள்ளது என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் சம்பவ இடத்தில் இருக்கும் அமைச்சர் விஜய் பாஸ்கர் மீட்புப் பணி குறித்து விளக்கம் அளித்து வந்தார். அப்போது, “சிறுவனின் சுஜித்தின் சத்தத்தை தற்போது கேட்கமுடியவில்லை. சிறுவனை மயக்கநிலையில் மீட்டால் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரந்து வந்துகொண்டிருக்கிறது.