தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஐந்துபேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தலைமை பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.