சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூன்று பேருக்குச் சொந்தமான ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கியது வருமான வரித்துறை.
குறிப்பாக, சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா தொடர்புடைய ரூபாய் 1,600 கோடி சொத்துகளைக் கடந்தாண்டு வருமான வரித்துறை முடக்கியது. அதேபோல் சசிகலா தொடர்புடைய 65 சொத்துகளை இதுவரை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு, சசிகலாவுக்கு சொந்தமான 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.