Skip to main content

‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை  விசாரணைக்கு வருகிறது...

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
sarkar

 


நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தை இயக்குநர் முருகதாஸ் இடக்கியுள்ளார். இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
 

இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை  கேட்காமல்,  படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்,படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டும், 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.  


அதில் செங்கோல் என்ற தலைப்பில்  இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ள  நிலையில், தன்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.
 

இதுகுறித்து  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளதாகவும் ,அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்ததில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். 
 

எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அறிவிக்கவேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார். அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை” - சைரன் பட இயக்குநர்

 

siren movie director speech

 

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில்  ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதைப் பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்துள்ளது.  

 

இந்த நிலையில் இப்படம் பற்றி இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் பேசுகையில், “இந்த படத்தில் அரசியல் இருக்காது. எல்லா விஷயங்களிலும் அரசியல் இருப்பது போல இந்த கதையிலும் அரசியல் இருக்கும். மற்றபடி நேரடியாக அரசியல் பேசியிருக்க மாட்டோம். ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை. படத்தில் சோசியல் மெசெஜ் மாதிரி ரெண்டு மூணு விஷயங்கள் பேசியிருக்கோம். அது திணித்தது போல் இருக்காது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்” என்றார். 

 

 

Next Story

“வரமா அல்லது சாபமா” - கீர்த்தி சுரேஷ் வருத்தம்

 

keerthy suresh about deep fake video

 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ, அன்மையில் இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்சையான நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக  ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களை எச்சரித்ததோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து இந்த ஏஐ டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் நடிகை கத்ரீனா கைஃப்பின் புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், “டீப் ஃபேக் வீடியோ வைரலாகி வருவது பயத்தை ஏற்படுத்துகிறது. இதைச் செய்தவர், அந்த நேரத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தாமல், ஏதாவது பயனுள்ள வகையில் செய்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று நமக்கு தொழில்நுட்பம் ஒரு வரமா அல்லது சாபமா என்று புரியவில்லை. அன்பு, நேர்மறை, விழிப்புணர்வு மற்றும் தகவல்களைப் பரப்புவதற்கு மட்டுமே இந்த தளத்தை பரவலாகப் பயன்படுத்துவோம், முட்டாள்தனமாக அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.