Published on 29/11/2022 | Edited on 29/11/2022

தஞ்சாவூர் அருகே மணல் லாரி ஒன்று வணிக வளாகத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மணல் லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வணிக வளாகத்தின் மீது மோதியது. இதில் மணல் லாரி கடையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆறுபேர் படுகாயமடைந்தனர். இவர்களில் லாரி ஓட்டுநர் மற்றும் நடைபாதையில் நடந்து சென்ற ஒருவர் என இருவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வணிக வளாகத்திற்குள் மணல் லாரி மோதிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.