Samsung labor issue CM MK Stalin key instruction

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டு, தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காணத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 7ஆம் தேதி (07.10.2024) நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (05.10.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.