Skip to main content

பல நாட்களாக ஒரே மாஸ்க்... பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கண்ணீர்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரோனாவால் மக்களிடம் நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது ஒன்றே வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்பதை இத்தாலி சம்பவங்களுக்குப் பிறகு உலக நாடுகள் உணர்ந்துள்ளது.

 

 The same mask for many days ... Indian students in the Philippines tears


வேகமாக வைரஸ் பரவி வருவதைப் பார்த்து வெளிநாடுகளில் படிக்கு தங்கள் மகன், மகள்களை உடனே வீட்டுக்கு வாங்க என்று பெற்றோர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேலைக்காக வெளிநாடு சென்றவர்களையும் பல நாடுகள் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெளிநாட்டில் இருந்து யாரும் வர முடியாத அளவில் தடைகள் விதிப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 400 க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாஸ்க்குகள் கூட கிடைக்காமல் பயன்படுத்திய மாஸ்க்குகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் மாணவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த மாணவர் மோனீஸ்கரனைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து கேட்டோம்..

பிலிப்பைன்ஸில் வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அதனால் நாங்கள் சொந்த ஊருக்குப் போகலாம் என்று கிளம்பியுள்ளோம். 17, 18, 19 ஆகிய தேதிகளில் செல்லலாம் என்று சொன்னதால் விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு விமானநிலையத்திற்குச் சென்றால் இந்தியாவிற்கு செல்ல இந்திய நாடு அனுமதி கொடுக்கவில்லை என்று 3 நாட்களும் நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகும் நாங்கள் இந்தியா திரும்ப அனுமதிக்கவில்லை. அதனால் வாடகை வீடு, விடுதிகளில் தங்கி இருக்கிறோம். விடுதியில் இருப்பவர்களுக்கு ஓரளவு உணவு கிடைக்கிறது. ஆனால் வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாஸ்க்குகள் கிடைக்கவில்லை. பல நாட்களாக பயன்படுத்திய மாஸ்க்குகளையே வெயிலில் காயவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறோம். வேறு வழியில்லை. 17 ந் தேதி விமானநிலையம் சென்று காத்திருந்த போது இந்தியத் தூதரகம் உணவு வழங்கியது. அதன் பிறகு இந்தியா உங்களை அழைத்துக் கொண்டால் உடனே அனுப்புவதாகக் கூறினார்கள். அதேநேரத்தில் சிங்கப்பூர் சென்றால் அங்கிருந்து இந்தியா போகலாம் என்ற வதந்தியும் பரவியுள்ளதால் அதற்காகவும் முயன்று முடியாமல் அறைகளில் முடங்கிக் கிடக்கிறோம்.

எங்களைப் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் விமானத்தில் அனுமதிப்பார்கள். அதன் பிறகு இந்திய விமானநிலையத்திலும் சோதிப்பார்கள். வைரஸ் இல்லை என்ற பிறகே வீட்டுக்கோ முகாமிற்கோ அனுப்புவார்கள். அதனால் எங்களைச் சோதனைகள் செய்து உடனே இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்திய மாணவர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதேபோல எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் சொந்த ஊருக்கு அழைத்து வாருங்கள் என்று உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

IND vs ZIM : 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய இந்தியா! 

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
IND vs ZIM: India won the series 4 - 1

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (14.07.2024) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியின் சார்பில் முதல் ஓவரை கேப்டன் சிக்கந்தர் ராஷா வீசினார். 

IND vs ZIM: India won the series 4 - 1

இந்த பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அசத்தினார். இருப்பினும் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக வீசப்பட்ட முதல் பந்தை மறுபடியும் எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே 12 ரன்களை அடித்த முதல் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்தார்.

இதனையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் வென்றார். 

Next Story

IND vs ZIM : டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
IND vs ZIM India won the T20 series and won it

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) நடைபெற்றது. இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது. 

IND vs ZIM India won the T20 series and won it

இத்தகைய சூழலில் தான் இந்தத் தொடரின் 4வது போட்டி இன்று (13.07.2024) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் இறுதி வரை விக்கெட்டையே பறிகொடுக்காமல் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அசத்தினர். இறுதியாக 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.