Salem dt Panaimarathupatti Oduvangadu near Raja children issue

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள ஒடுவன்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இந்நிலையில் தான் இவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தனசேகர் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இவரின் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் என்பவர் தலைமறைவாகியுள்ளார். நில தகராறில் சிறார்கள் இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் இரு சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக பனமரத்துப்பட்டி போலீசார் இருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்திய போது நிலத்தகராறில் ராஜாவின் வீட்டுக்குள் வந்த சிலர் 17 வயதாகும் சுகுணாவையும், 15 வயதாககும் அவரது தம்பி நவீனை கழுத்தை அறுத்து கொலைசெய்துள்ளதாக முதற்கட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.