Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

 

 

salem district mettur dam water level

 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. 

 

இன்று (20/11/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,361 கனஅடியில் இருந்து 10,134 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.73 அடியாகவும், நீர் இருப்பு 60.68 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைந்தது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்