Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

 

salem district mettur dam water level

சேலம், மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

 

இன்று (20/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,079 கனஅடியில் இருந்து 11,241 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.26 அடியாகவும், நீர் இருப்பு 52.94 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

 

இதனிடையே காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,000 கனஅடியாக நீடித்து வருகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்