Skip to main content

போலி நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 Salem Attur Court dismisses government school teachers anticipatory bail pla

 

மனைவிக்கு ஜீவனாம்ச தொகையைத் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற போலி உத்தரவு நகல்களை சமர்ப்பித்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.    

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45) அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய முதல் மனைவி கலா. கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கலாவுக்கு ஆசிரியர் சரவணனின் ஊதியத்தில் இருந்து மாதம்தோறும் ஜீவனாம்சத்திற்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சரவணன், ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தின் பேரில்  ஒரு உத்தரவு நகலை, அவர் முன்பு பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி  மாவட்டம் சிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலில், சரவணனின் முதல் மனைவி கலாவுக்கு தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஜீவனாம்ச தொகையை அவர் கோரவில்லை. எனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 

அதேபோல, தற்போது பணியாற்றி வரும் எலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அதே நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற ஒரு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். அந்த உத்தரவில், முதல் மனைவி கலாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜீவனாம்சமாக மாதம் 9000  ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஜீவனாம்ச தொகை வேண்டாம் என்று கலா சொல்லிவிட்டார்.  எனவே, 2022 ஆம் ஆண்டு முதல் சரவணனுடைய சம்பளத்தில் ஜீவனாம்ச தொகை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த இரு உத்தரவு நகல்களின் மீதும் இரண்டு தலைமை ஆசிரியர்களுமே சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உத்தரவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவற்றை ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்து விவரம் கோரினர். இந்த உத்தரவு நகல்களை ஆய்வு செய்த நீதிமன்ற எழுத்தர் செல்வி, இப்படி ஒரு உத்தரவை ஆத்தூர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், இவை இரண்டுமே போலியானவை என்றும் கூறினார்.

 

மேலும் செல்வி, இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை ஆட்சேபனை தெரிவித்தார். ஆசிரியரே மோசடியாக  நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்றார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி சுமதி, ஆசிரியர் சரவணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய ஆத்தூர் நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.