Skip to main content

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாகுல் அமீது காலமானார்!  

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

Sakul Ameeth, senior executive of the Naam Tamil Party has passed away!

 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 

அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது, கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.