
சிதம்பரம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ளவும், பயணங்களில் ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரி செய்யும் பொருட்டாக சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். இருப்புப் பாதை காவலர்கள் மற்றும் சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் ராஜி பிரசாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு ரயில் பயணங்களில் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக இலவச கட்டண தொலைபேசி எண் 1512 ஐ உடனடியாக அழைக்க வேண்டும் என்றும் மேலும் ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து whatsapp குழு உருவாக்கி அதில் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை பகிர்ந்தால் உடனடியாக ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி பள்ளி மாணவிகள், தினந்தோறும் ரயில்கள் மூலம் பணி நிமித்தமாக வந்து செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.