Skip to main content

விஜய்யுடன் 5 வருடமாகப் பேசவில்லையா? புதிய கட்சி எதற்கு? - எஸ்.ஏ.சி விளக்கம்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

sa chandrasekar press meet

 

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சொந்த விருப்பத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிவு செய்துள்ளதாகவும், இதற்கும் நடிகர் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கடுத்து, தனது 'விஜய் மக்கள் இயக்க'த்தின் பெயரையோ, புகைப்படங்களையோ தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். எனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் இணைய வேண்டாம். அதேபோல் அந்த அரசியல் இயக்கம் என்னைக் கட்டுப்படுத்தாது எனவும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், 

 

விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான தேவை என்ன?

 

எனக்குத் தேவைப்பட்டது நான் செய்கிறேன்.


நடிகர் விஜய்யும் நீங்களும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பேசவில்லை, இருவருக்கும் உறவு இல்லாத சூழல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது உண்மையா?

அவரவர்கள் கற்பனைகளுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கரோனாவிலேயே இரண்டு மூன்று முறை போய் இருக்கிறோம், பேசியிருக்கிறோம். யாரோ ஒருவர் போவதில்லை பேசுவதில்லை என்று கூறினால், இதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. நான் அவர் பெயரில் ஆரம்பிக்கவில்லை. அவர் பெயரில், 1993 ஆம் ஆண்டு, நான் உருவாக்கி, ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு, பொது மன்றமாக மாறி, பிறகு மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே, அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அதைப் பதிவு செய்து இருக்கிறேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.