Skip to main content

திருநங்கைகள் உணவகம்! அமைச்சர் வேலுமணி வாழ்த்து! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

ssss

 

கரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோவை திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் இணைந்து கடந்த வாரம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 'கோவை ட்ரான்ஸ்' கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளனர்.  

 

தமிழகத்தில் முதன்முறையாக, முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த உணவகத்தை நிர்வகிக்கும் திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் முயற்சியைப் பாராட்டி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அந்த பதிவில், "கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 திருநங்கைகள் இணைந்து கோவை ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ள செய்தியறிந்து மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த சீரிய முயற்சி வெற்றி பெற்று வாழ்வில் மென்மேலும் சிறக்க திருநங்கைகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்த பாராட்டை தொடர்ந்து, கோவை ட்ரான்ஸ் கிச்சன் உணவகத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழக பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசனும் தமது கட்சி நிர்வாகிகளுடன் சென்று இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்டு அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் 'ட்ரான்ஸ் கிச்சன்' உணவக நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பர்கரில் பிளாஸ்டிக் கையுறை... வைரலாகும் வீடியோ

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Plastic glove on burger... viral video!

 

பிரபல உணவுக் கடையில் பர்கர் உள்ளே கையுறை இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

திண்டிவனத்தைச் சேர்ந்த டேவிட் என்பவரும், அவரது நண்பரும் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில் பர்கர் வாங்கியுள்ளனர். அதனை சாப்பிடும் போது, பர்கர் உள்ளே பிளாஸ்டிக் கையுறை இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக இது குறித்து ஊழியர்களிடம் புகார் அளித்த போது, அங்கு பணியில் இருந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு, வேறு பர்கர் தருவதாகக் கூறினர். 

 

பர்கரை வீடியோவாக எடுத்த டேவிட், அது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

Next Story

பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Seal the famous Bun Protta restaurant

 

சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரித்ததாகக் கூறி, பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். 

 

மதுரை மாவட்டம், சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணை சந்திப்பு சாலையோரத்தில் அமைந்துள்ள 'மதுரை பன் புரோட்டா' என்ற பெயர் கொண்ட கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடைக்கு நேரில் சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கு அதிரடியாக ஆய்வு செய்ததுடன், சோதனையும் மேற்கொண்டனர். 

 

இதில், சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பது உறுதியானதால், அந்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.