பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் மணல் சேராமல் தடுப்பதற்காக ரூ.27 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி, ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் உஷா என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Rs. 27 Crores Blocked at pazhaverkadu Lake... Orders state government to file statement

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போத்திராஜ், பழவேற்காடு ஏரி முகத்துவராத்தில் தேங்கியிருந்த மணல், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக அகற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்பகுதியில் மணல் சேராமல் தடுக்க 27 கோடி ரூபாய் செலவில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில கடலோர ஒழுங்கு முறை ஆணைய அனுமதியும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், திட்டத்திற்காக பெறப்பட்ட அனுமதிகளையும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள அனுமதி கோரிய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தனர்.