RP Udayakumar who voted; A cow that ran away

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

அதிமுக சார்பில் ஆரம்பத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோடு கிழக்கு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தேநீர் போடுவது, பரோட்டா போடுவது என நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இன்று ஆர்.பி.உதயகுமார் மாட்டு வண்டியுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த பொழுது மாடு மிரண்டு ஓடியது. இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment