/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_119.jpg)
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ரவுடிகள் பட்டியலில் இருக்கும் அரியமங்கலம் ரவுடி குலாம் தஸ்தகிர் (32). இவர், கடந்த ஆண்டு நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ‘பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க மாட்டேன்; குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ரவுடி குலாம் தஸ்தகீர் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி மற்றும் பொது சொத்திற்குப் பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்மீது அரியமங்கலம் போலீசார் கடந்த 19ஆம் தேதி வழக்குகள் பதிவு செய்தனர்.மேலும், ரவுடி குலாம் தஸ்தகீர் உடனடியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)