root conflict; College student lose theie live

சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் பொழுது கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல தொடர்பாக பிரச்சனைகளும் மோதல்களும் அதிகரித்துவரும்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுஉயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் வைத்து சுந்தர் என்ற மாணவர்கொடூரமாக கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.