Skip to main content

கொட்டித் தீர்க்கும் கனமழை; அழுகும் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கன மழையால் நாகை பகுதியில் 500 க்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துவருகின்றனர்.

 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகிக் கடந்த இரண்டு மாதங்களாகவே தினசரி மழை கொட்டித் தீர்த்தது. அந்த நீர்வடிவதற்குள் வடகிழக்கு பருவமழையும் துவங்கி, இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

நாகப்பட்டினம் அடுத்துள்ள கீழ்வேளூர் பகுதிகளில்  பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர்  பரப்பிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கருங்கண்ணி, கர்ணாவெளி, ஆளக்ககரை,  வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிப்  பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அந்தப் பகுதி விவசாயிகள்  மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகிவிட்டது. இதற்குக் காரணம் இந்தப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாமல் போனதன் விளைவே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளது. பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட  பயிர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவேண்டும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.