Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்! 

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

corona

 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ளது வானதிராயபுரம். இந்தக் கிராம பஸ் ஸ்டாப் அருகில் கடந்த 3ஆம் தேதி ஒரு தம்பதி அவ்வழியே சென்றவர்களிடம் நகை பறிக்க முயன்றனர். அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் வடலூர் போலீசில் ஒப்படைத்தனர். 

 

போலீஸ் விசாரணையில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதி சௌடேஸ்வரி நகரைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் இருவரும் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

 

அந்த இருவரையும் கடந்த 4ஆம் தேதி கடலூர் சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர்கள் இருவரையும் நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அந்தப் பெண் கைதிக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்களும் வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20க்கு மேற்பட்ட காவலர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 20 காவலர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். மீதியுள்ள போலீசாருக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் கிருமி நாசினி தெளித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் நமக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்களைப் பிடிக்கக் கூட பயப்படும் நிலையை உருவாக்கியுள்ளது இந்தக்  கரோனா.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பகலில் அர்ச்சகர், இரவில் திருடன்; கோவில் நகை முதல் இருசக்கர வாகனம் வரை  திருட்டு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
priest stole everything from temple jewels to two-wheelers

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும் வயிற்று பிழைப்பிற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசாரின் தீவிர வாகனத்தை அணியின் காரணமாகவும் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

வளைகாப்பு நிகழ்விற்குச் சென்ற பெண்; வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Broke the lock of the house and stole 10 pounds of jewellery

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் மனைவி மீரா. திருமால் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீராவின் அண்ணன் மனைவிக்கு புதுபாலப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மீரா தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு நேற்று மாலை புதுபாலப்பட்டு கிராமத்திற்குச் சென்றுள்ளார். 

தொடர்ந்து நிகழ்ச்சி முடித்துவிட்டு மீரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீரா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு மீரா அதிர்ச்சி அடைத்தார். இதுக்குறித்து மீரா வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர் ராஜவேல் குழுவுடன் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

Broke the lock of the house and stole 10 pounds of jewellery

இதுக்குறித்து மீரா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் சங்கராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விநாயக முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.