Skip to main content

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு...

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Retirees can get a life certificate just like at home! Post Office Special Arrangement !!

 

 

ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

 

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் கூறுகையில், ''ஓய்வூதியர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரசு கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். 

 

வயதான பல ஓய்வூதியர்கள் நேரில் சென்று சான்றிதழ் சமர்ப்பிப்பதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

ஓய்வூதியர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து கை விரல் ரேகையை பதிவு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து விடலாம். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் உடனடியாக ஓய்வூதியர்களின் செல்போனுக்கு வந்துவிடும். 

 

இந்த சேவையைப் பெற 70 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி தபால்காரரை அணுக முடியாத ஓய்வூதியர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று இந்த சேவையைப் பெறலாம். தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஓய்வூதியர்கள் அனைவரும் தபால்துறையின் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பெரியார் பல்கலை. முன்னாள் பதிவாளர் விவகாரம்; பேராசிரியர்கள் அதிரடி முடிவு!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Periyar University Order of the Vice-Chancellor Professors action decision
முன்னாள் பதிவாளர் தங்கவேலு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலைப் பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்படாமல் பணி ஒய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Periyar University Order of the Vice-Chancellor Professors action decision
துணைவேந்தர் ஜெகநாதன்

இந்நிலையில் ஊழல் முறைகேட்டில் சிக்கிய தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கவேலு மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்க ஆணையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 

Next Story

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரிக்கை

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Request for pension benefits of Annamalai University retirees

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.

 

இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அயர் பணி பேராசிரியர்கள் நலச்சங்கம், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நிறைவு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக பணி நிறைவு ஊழிய நலச் சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழிய நலச்சங்கம் உள்ளிட்ட 8 சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை இல்லை, எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது,  எனவே மாணவர்கள் சேர்க்கையில் உரிய கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும், ஒவ்வொரு துறைக்கும் ஆராய்ச்சி நிதியை பெறுவதற்கான இலக்கை நிர்ணயத்து நிதி வழங்கும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெற்று ஆராய்ச்சி நிலையை உயர்த்த வேண்டும். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைத்துள்ளதை ரத்து செய்து உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானத்தின் நகலை கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலமாக சென்று துணைவேந்தரின் செயலாளரிடம் அளித்தனர் வரும் 18-ஆம் தேதிக்குள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகத்தில் அனைத்து தரப்பு ஆசிரியர் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு தலைவர் மதியழகன் அறிவித்துள்ளார்.