republic day prevention train parcel in delhi

Advertisment

குடியரசு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை ஜன. 23 முதல் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 26- ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

தமிழகத்தில், ஆளுநர் கொடியேற்றுகிறார். ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதன் ஒருபகுதியாக, சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக டெல்லி, நிஜாமுதீன் செல்லும் ரயில்களில், வரும் சனிக்கிழமை (ஜன. 23) முதல் 26- ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு பார்சல்கள் அனுப்ப ரயில்வே நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களில் எந்த வகையான பார்சலும் புக்கிங் செய்யப்பட மாட்டாது. அதேநேரம், அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து விரைவு ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்நிலைய நுழைவு வாயில்களில் டோர் ஃபிரேம் டிடெக்டர் மூலம் பயணிகளை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பும், மோப்ப நாய்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது.