Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா? - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேட்டி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
reported late Kaniyamur school girl mother is contesting in the Vikravandi by-election

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் மாணவியின் உடற்கூறு ஆய்வு சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கை, பள்ளி வளாகம் மற்றும் உடற்கூறு ஆய்வகம் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் காவல்துறையினருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இன்று காலை நீதிமன்றத்தில் மாணவியின் தாய் செல்வி தற்பொழுது ஆஜராகியுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினர் ஆஜராகாததால், நேரம் குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருந்த நிலையில் பின்னர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். அப்போது  தாய் செல்வியும் ஆஜரானார். அவர்கள் கூறியிருக்கும் ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்குவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுவே விரைவாகத்தான் விசாரிக்கப்படுகிறது என நீதிபதி விளக்கம் அளித்தார். 

இதனிடையே நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவியின் தாய் செல்வி போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வி, “விக்கிரவாண்டி இடைத்தேரலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலம் அவகாசம் குறைவாகவே உள்ளதால் அதற்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரானால் போட்டியிடுவேன். இல்லையென்றால் போட்டியிடவில்லை” எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கும் மழை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Villupuram, Kallakurichi, torrential rain

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம்  சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டிமேடு, பிடாகம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, மனம்பூண்டி, ஆவியுர் பகுதிகளிலும் கன மழை பொழிந்து வருகிறது.

Next Story

 கள்ளச்சாராய விவகாரம்; காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
7 persons, including  Police Inspector, transferred to waiting list in Kallakurichi

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சமய் சிங் மீனா உட்பட ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தைக் கண்காணிக்கத் தவறியதாகவும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் கூறி கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட நான்கு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு காவலர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சின்னசேலம் தனிப்பிரிவு காவலர் சரவணன், கச்சிராயபாளையம் தனிப்பிரிவு காவலர் கணேஷ், சங்கராபுரம் தனிப்பிரிவு காவலர் சிவஜோதி மற்றும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு தனிப்பிரிவு காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.