Skip to main content

"எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா?" - கூகுள் மேப்பை நம்பி குரூப்-1  எக்ஸாமை தவறவிட்ட மாணவி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Relying on Google Map Group - 1 A student who missed the exam

 

கூகுள் மேப் பொய் சொல்லாது என நம்பிய கோவை மாணவி, கடைசியில் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதாமல் ஏமாற்றம் அடைந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு கடந்த சனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. 33 தேர்வு மையங்களில் நடந்த  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, கோவை பீளமேடு பகுதியிலுள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த மையத்தில் 45 அறைகளில் 900 தேர்வாளர்கள்  டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத இருந்தனர். 

 

இந்நிலையில், கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், நேஷனல் மாடல் பள்ளியில்  குரூப்-1  தேர்வை எழுதக் கிளம்பியுள்ளார். அப்போது, வடவள்ளி பகுதியிலிருந்து தேர்வு மையத்துக்கு வழி தெரியாத ஐஸ்வர்யா, கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவரது கெட்ட நேரம் நேஷனல் மாடல் பள்ளி அவிநாசி சாலையில் உள்ளது எனத் தவறான முகவரியைக் காண்பித்துள்ளது. இதையடுத்து, அவிநாசி சாலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, தேர்வு மையம் அங்கில்லை எனத் தெரிந்தவுடன், பதட்டத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளார்.

 

ஒருவழியாக நேஷனல் மாடல் பள்ளியைக் கண்டுபிடித்த ஐஸ்வர்யா, தேர்வு மையத்துக்குள் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துள்ளார். அவர் 9.05 மணிக்கு வந்ததால்,  குரூப்-1  தேர்வை எழுதுவதற்கு, அங்கிருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தாசில்தார் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, தாமதமாக வந்ததால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த  குரூப்-1 தேர்வுக்கு, நான் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், பள்ளி நிர்வாகம், கூகுள் மேப்பை அப்டேட் செய்யாததால், எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மற்ற மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள், 9.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் தான் அனுமதிக்கப்படாதது வருத்தமளிக்கிறது என தேர்வு எழுத வந்த ஐஸ்வர்யா சோகத்துடன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.