Skip to main content

வெளியானது 'வலிமை சிமெண்ட்' - விலை எவ்வளவு தெரியுமா?

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

 Released 'Valimai Cement'-Do you know how much it costs?

 

தமிழ்நாடு அரசு சார்பில் ‘வலிமை’ என்ற பெயரில் குறைந்த விலை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலிமை சிமெண்டினை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

 

கரோனாவிற்குப் பிறகு கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை உயரும் என சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, தமிழ்நாட்டில் அரசு சார்பில் 'வலிமை' என்ற பெயரில்  சிமெண்ட் அறிமுகம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்த சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலிமை சிமெண்டினை அறிமுகம் செய்துவைத்துள்ளார். டான்செம் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை சிமெண்ட், ஒரு மூட்டை 360 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக சிமெண்டின் சில்லறை விற்பனை விலை சந்தையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளைக் தீர்க்க வேண்டும்'- ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'Problems should be resolved within a month'- Retired Fair Price Shop Workers Association demands

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் மாநில அமைப்பாளர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்றார்.  

இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார், சுவாமிநாதன், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளை வைத்துக்கொண்டு கூட்டுறவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது.  கூட்டுறவுத்துறை நியாய விலை கடை பணியாளர் ஓய்வுக் கால சலுகைகள் குறித்து கூட்டுறவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பலனும் ஊழியர்களுக்கு ஏற்படவில்லை.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பண பலன்கள் அவர்களுக்கு சென்றடையாவிட்டால் தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் கூட்டுறவுத் துறையில் ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பிரச்சினைகளை கூட்டுறவுத்துறை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்'' எனக் கூறினார்.

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு உலோக ஆணிகள் கண்டுபிடிப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
nn

சங்ககால கோட்டைகளில் எஞ்சியுள்ள வட்டக்கோட்டையான பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 18.06.2024 அன்று தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையிலான அகழாய்வுக் குழுவினர் தொடர்ந்து அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டையின் மையப்பகுதியில் உள்ள அரண்மனை திடலுக்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள 3 புதிய அகழாய்வு குழிகளில் B21 எனும் குழியில் செங்கல் தளம் ஒன்று வெளிப்பட்டது. தென்கிழக்கு மூலையில் வெளிப்பட்ட இந்த செங்கல் தளம் 280 cm நீளம் மற்றும் 218 cm அகலம் கொண்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்கு பிறகு 424 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இவை கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், இரும்பு பொருட்கள் மற்றும் செப்புப் பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கி 26 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்  இன்று சனிக்கிழமை A 22 என்ற  அகழாய்வு குழியில் 4 செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளது  இதுபோன்று C 20 என்ற அகழாய்வு குழியிலும் செம்பினால் ஆன ஆணி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 2 gm  நீளம் 2.3cm மற்றும் அகலம் 1.2cm . இதுவரை இரும்பினால் ஆன ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் தற்போது செம்பினால் ஆன ஆணிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக G27 எனும் அகழாய்வுக் குழியில் செம்பினால் ஆன 3செ.மீ நீளமுள்ள அஞ்சனக்கோல் (மைத்தீட்டும் குச்சி) ஒன்றும் கிடைத்திருந்தது. தற்போது பெற்பனைக்கோட்டை அகழாய்வில் தொடர்ந்து செம்பினால் ஆன பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.