Skip to main content

திருச்சியில் செஞ்சிலுவைச் சங்கம் எங்கே? தேடும் சமூக ஆர்வலர்கள்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

r

உலகளவில் பேரிடர்கள், யுத்தங்கள் நடைபெறுகின்ற பகுதிகளில் உதவிடும் பொருட்டு கடந்த 1863 - ஆம் ஆண்டு ஹென்றி டுனான்ட் என்பவரின் முயற்சியால் சர்வதேசச் செஞ்சிலுவைக் குழு உருவாக்கப்பட்டது.
 

அந்தக்குழு 1864- ஆம் ஆண்டு பல்வேறு சங்கங்களையும் இணைத்து ஜெனிவா சாசனத்தை உருவாக்கியது. அந்த அமைப்புக்கென தனிக் கொடியும் உருவாக்கினர். சர்வதேசச் செஞ்சிலுவைக் குழு, ஆயுத மோதல்களாலும் உள்நாட்டு கலவரங்களாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு நடுநிலையோடு உதவுகின்ற ஒரு மனிதநேய அமைப்பாகவும் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாகவும் இருந்து வருகிறது.

 
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க சம்மேளத்தில் 192 சங்கங்கள் அமைந்துள்ளன. இந்த சங்கங்கள் உலகளவில் ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், உலக நாடுகள் அனைத்திலும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 
இந்தியாவில் 1920- ஆம் ஆண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் துவங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உருவாக்கப்பட்டன. மாவட்ட அளவிலான சங்கத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சங்கத்தின் தலைவராக இருந்து வழி நடத்துவார். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவரும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

 
சமூக அக்கறையும், உதவும் மனப்பான்மையும், பேரிடர் காலங்களை எதிர்கொண்டு அமைப்பை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு நபர் அமைப்பின் செயலாளராகப் பொறுப்பு ஏற்பதும் வழக்கம். மாவட்ட ஆட்சியர் அவர்களுக்குப் பல்வேறு நிர்வாகப் பணிகள் இருப்பதால், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகச் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பெயரில் அமையும்.
 

பல்வேறு மாவட்டங்களில் செஞ்சிலுவைச் சங்க செயல்பாடுகள் பாராட்டும் படியாக அமைந்திருந்தாலும், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அப்படியொரு அமைப்பு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 
 

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகளாக யார்? யார்? இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.
 

புதிதாக அமைப்பில் எப்போது உறுப்பினர் பதிவு நடைபெற்றது என்பதும் தெரியவில்லை. அலுவலகம் என்று ஒன்று இருந்தால், அதில் சமூக ஆர்வலர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவார்கள். அதற்கு வழிவிடாமல், தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் அப்படி ஒரு அமைப்பு இருப்பதையே காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
 

http://onelink.to/nknapp

 

மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்து புதிய நிர்வாகிகளை நியமித்து செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே திருச்சியின் சமூக ஆர்வலர் ஆ.வையாபுரி, உள்ளிட்டோர் கோரிக்கையாக வைத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பேரழிவின் விளிம்பில் இந்தோனேசியா" - செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

INDONESIA

 

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியா, கரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருக்கிறது.

 

இதுவரை 57,138 கரோனாவால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறினாலும், பரிசோதனை வீதம் குறைவாக இருப்பதால், கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 

இதற்கிடையே அந்நாட்டின் கரோனா பணிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சிட்டி நதியா டார்மிஜி, இரண்டு மூன்று வாரங்களில் கரோனா பரவல் உச்சத்தை எட்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தோனேசியாவின் மருத்துவ அமைப்பு சீர்குலைந்து விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தோனேசியா பேரழிவின் விளிம்பில் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு, "இந்தோனேசியா அவசரமாக மருத்துவ பராமரிப்பு, கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். புதிய பாதிப்புகள் அதிகரித்து நாட்டை கரோனா பேரழிவின் விளிம்பில் விட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும், ஆக்சிஜன் விநியோகம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்க உலகளாவிய நடவடிக்கைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 270 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியாவில் இதுவரை 5 சதவீதம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மருத்துவமனைக்கு ரூ 1.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய ரெட் கிராஸ் சொசைட்டி...

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Red Cross Society donates Rs 1.5 lakh oxygen generator

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகமோசமாக இருந்துவருகிறது. பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவிவருகிறது. அதேபோல், சிலகாலம் முன்வரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை இருந்துவந்தது. ஆனால், தற்போது தமிழக அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பல்வேறு தொண்டு  நிறுவனங்களும், தன்னார்வல அமைப்புகளும், நபர்களும் மருத்துவ உதவிகளைச் செய்துவருகின்றனர்.

 

அந்தவகையில், சிதம்பரம் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சார்பில் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவிட் -19 சிகிச்சைக்காக ரூ 1.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. சிதம்பரம் ரெட்கிராஸ் தலைவரான  மதுபாலன் கலந்துகொண்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நிர்மலாதேவியிடம் வழங்கினார். 

 

இதில் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ராஜேந்திரன், கேஜி நடராஜன், கமல்கோத்தாரி, சிதம்பரநாதன், வட்டாட்சியர் ஆனந்த், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல்,சிதம்பரம் மேலவீதியில் உள்ள கஸ்தூரிபாய் கம்பெனி துணிக்கடை நிறுவனம் ரூ 1.5 லட்சம் செலவில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.