Skip to main content

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு சிறை - நீதிபதி அல்லி உத்தரவு

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

RBVS Court custody for Maniyan - Judge Alli orders

 

திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாகப் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக வைரலாகி வந்தது. இவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவந்தனர். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் எழுந்தன.

 

சென்னை தியாகராயர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் சட்டமேதை அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் மீது சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. செல்வம் அவர்களால் புகார் அளிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

 

RBVS Court custody for Maniyan - Judge Alli orders

 

போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்” என கோரினார். மேலும், காவல் உறுதி செய்யப்பட்டால் தனக்கு தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

 

இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, “இவை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். தற்போது செப். 27 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு” என தனது உத்தரவில் தெரிவித்தார். 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“மகன் சொத்தில் தாய்க்கு உரிமையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Madras High Court says Mother has no right in property of married son

 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

 

இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அக்னஸ்க்கும் பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டுத்  தீர்ப்பளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான வழக்கு இன்று (18-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அக்னஸின் சார்பில் வழக்கறிஞர் மித்ரா நேஷா வாதிட்டார்.அதில் அவர், “கணவர் இறந்தால், அவருடைய விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசு தாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால் தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது” என்று வாதிட்டார்.

 

அவருடைய வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்கமுடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது. எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“சனாதனம் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Udayanidhi Stalin says I have not spoken anything wrong about Sanatanam

 

சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள அரங்கத்தில் திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த தனக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, அந்த மாநாட்டை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

 

இது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மக்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது. இதுபோன்ற கூட்டங்கள் நடத்துவதற்கு அடிப்படை உரிமை என்று மனுதாரர் கூறினாலும், மக்களின் நம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக பிரச்சாரம் செய்ய இந்த நீதிமன்றம் அனுமதி வழங்காது.

 

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியது குறித்து இதுவரை எந்த வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. இதன் மூலம் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சியில் பேசும்போது எந்தவித வேறுபாடு இல்லாமலும், கொள்கை ரீதியாக பிளவுபடுத்தாமலும் கவனத்துடன் பேச வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

 

நீதிமன்றம் கூறிய கருத்து தொடர்பாக நேற்று (06-11-23) செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “சனாதன கொள்கை குறித்து நான் பேசியது எந்த தவறும் இல்லை. நான் சொன்ன வார்த்தையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் பேசியதை விடவும் நான் குறைவாகத்தான் பேசியுள்ளேன். நான் பேசியது சரிதான். அமைச்சர், எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர் ஆகிய பதவிகள் எல்லாம் இன்று வரும் நாளை போகும். ஆனால், நாம் முதலில் மனிதனாக இருப்பது தான் முக்கியம்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்