Skip to main content

ராசி மணலில் அணைக்கட்ட சட்டமன்றத்தில் அப்போதே தீர்மனிக்கப்பட்டது - பழ நெடுமாறன் பேச்சு

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
ne

 

’’ராசிமணல் அணைகட்ட நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே  சட்டமன்றத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்று பேசினார் பழநெடுமாறன்.

சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு சார்பில் காவிரியின் குறுக்கே பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ராசிமணலில் அணை கட்டுமானப் பணியை தமிழக அரசு உடனே துவக்கிட வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

போராட்டத்தில்  நிறைவுரையாற்றிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன் பேசுகையில், "தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை செயல்பாடு ஏற்கதக்கதல்ல காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் விளை நிலங்களுக்கு இது நாள் வரை தண்ணீர் சென்றடையவில்லை. உலகத்திலேயே ஒரே நாட்டிற்குள் மாநிலங்களுக்குள் மாநிலம் தண்ணீர் தரமறுப்பது கர்நாடகம் மட்டுமே தான். இது வெட்ககேடானது.

 

காவிரியின் உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து ஒக்கேனக்கலுக்கு மேலே தமிழக எல்லையில் ராசி மணல் புதிய அணைகட்ட நான்  சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு சென்றோம். அதனை ஏற்று ஒரு மனதாக அணைகட்ட தீர்மானிக்கப்பட்டது. 

 

பிறகு ராசி மணலில் அனைகட்ட  மறுத்து, மேகதாட்டுவில் அணைகட்ட கர்நாடகம் முயற்சித்த போது அப்போதைய முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்கள் ராசிமணல் அனைகட்டி தமிழகத்திற்கு கிடைக்கும் உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள  எங்களுக்கு உரிமை உண்டு எனவும், தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து மேகதா ட்டு அனைகட்ட சட்ட படி கர்நாடகத்திற்கு உரிமை இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எனவே தமிழக அரசு ராசி மணல் அணைகட்டுவதற்கான நடவடிக்கையை உடன் துவக்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.
 

சார்ந்த செய்திகள்