Skip to main content

எலியால் விடுதலையான கஞ்சா கடத்தல் நபர்கள்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

Rat-free individuals

 

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மெரினா போலீசார், மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சாவை கடத்தி விற்பனைக்காக வைத்திருந்ததாக இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ் மற்றும் ராஜகோபால் ஆகிய இருவரை விசாரித்து வந்தனர். தொடர்ந்து இரண்டு பேரிடம் நடத்தி முடிக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மெரினா காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்றது. பிடிக்கப்பட்ட 22 கிலோ கஞ்சாவிலிருந்து ஆய்வுக்காக 100 கிராம் கஞ்சா அனுப்பப்பட்டது. மீதமுள்ள 21.9 கிலோ கிராம் கஞ்சா காவல் நிலையத்திலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்குப் பதிலாக 11 கிலோ கஞ்சாவை மட்டுமே இருப்பில் காட்டியுள்ளனர் போலீசார்.

 

22 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகத் தெரிவித்த சென்னை போலீசார், அதனை நிரூபிக்கத் தவறியதால் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ் மற்றும் ராஜகோபால் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Rain alert for 22 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், 'நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும்(22.06.2024) நாளையும்(23.06.2024) மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது' என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் 7:00 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கள்ளச்சாராயத்தில் கலந்திருந்தது மெத்தனால் மட்டுமல்ல - அதிர்ச்சியூட்டும் புது தகவல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 It is not just methanol that was mixed in fake liquor - new information

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 It is not just methanol that was mixed in fake liquor - new information

இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷத் தன்மை ஏற்பட்டது தொடர்பான தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் மெத்தனால் மட்டுமல்லாது டர்பைன்டைன் ஆயிலும் கலக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கிய நிலையில் அவரிடம் இருந்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மெத்தனாலை வாங்கி கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தியது தெரிய வந்திருந்தது. இந்தநிலையில் புதுச்சேரியிலும் மெத்தனால் விற்பனை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

மாதேஷ் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலமாக மெத்தில் டர்பன்டைன் ஆயில் என்கின்ற வேதிப்பொருளை 10 கேன்களில் வரவழைத்திருக்கிறார். அந்தக் கேன்கள் விருத்தாசலத்தில் உள்ள ஒரு செராமிக் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த நிறுவனம் ஜோதி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. அதில் இரு கேன்களை மாதேஷ் பெற்றுக் கொண்டதாகவும், சின்னதுரைக்கு அந்தக் கேன்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளச்சாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கேசவன் என்ற இருவரைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The website encountered an unexpected error. Please try again later.