A rare species of owl in Sathyamangalam

ஈரோடு சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை ஒன்றை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. பூட்டி இருந்த மண்டபத்தில் இருந்து ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சென்று பார்த்தபோது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

இதுகுறித்து அவர் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு புளியங்கோம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இது அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர்.