
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் பெரியார் நகர் பகுதியில் இன்று (21.04.2023) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது அதிமுக பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.