பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதுவை மாநில முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் வி.பாலன், செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி ஆகியோரும் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது புதுவை மாநில பா.ம.க.பொறுப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ், நிர்வாகிகள் மதி, கணபதி, ஜெயபால், சிவா, புருஷோத்தமன், சத்தியா ரெட்டியார் ஆகியோர் உடனிருந்தனர்.