Skip to main content

“எங்கள் தலைவர் எப்போதும், யாரையும் புண்படுத்த மாட்டார்” - ரஜினி மன்ற செயலாளர் 

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

rajinikanth will never hurt anyone says fans club Secretary

 

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உலகமெங்கும் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் விதவிதமான முறையில் கொண்டாடி வரவேற்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், சோளிங்கர் சுமதி திரையரங்கில் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என். இரவி தலைமையில், கேரளா செண்டை மேள தாளத்துடன் பால் குடம் ஏந்தி வந்து பாலாபிஷேகம் செய்து உற்சாக நடனங்களுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

ad

 

இது குறித்து மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என் இரவியிடம் பேசியபோது, “தலைவர் படம் திரைக்கு வருகிறது என்றாலே, அது எங்களுக்கு திருவிழா தான். 73 வயது கடந்தும் தன்னுடைய அசாத்திய உழைப்பால் மக்களை மகிழ்விப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதாயத்திற்காக தேவையற்ற விவாதங்களைத் திட்டமிட்டு கிளப்பி வருகிறார்கள். எங்கள் தலைவர் எப்போதும், யாரையும் புண்படுத்த மாட்டார். காரணம் யாரையும் தனக்குப் போட்டியாகக் கருதாமல் தனக்குத் தானே போட்டி என்று கருதுபவர். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் சொன்னது போல எங்கள் தலைவர் ரெகார்ட் மேக்கர்., ரெகார்ட் பிரேக்கர் கிடையாது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஜெயிலர் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

 

rajinikanth will never hurt anyone says fans club Secretary

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, சோளிங்கர், ஜோலார்பட்டை, ஆற்காடு வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படம் நிச்சயம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு நல்ல சாதனைப் படமாக அமையும்” என்றார்.

 

இளம் நடிகர்களின் ரசிகர்களுக்கு போட்டியாக ரஜினி ரசிகர்கள் திரைப்பட வெளியிட்டூக்கு கட் அவுட், பேனர், கொடி, தோரணம், ஊர்வலம், மண் சோறு, பாலாபிஷேகம், ஆராதனை என அலப்பறை செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.எம்.டி.பியின் டாப் 10 இந்தியப் படங்கள் - இடம்பெற்ற 2 தமிழ்ப் படங்கள்

 

IMDb Top 10 Most Popular Indian Movies of 2023

 

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டாப் 10 மிகவும் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளது. முழு பட்டியல் விவரம் பின்வருமாறு...

 

1. ஜவான் (இந்தி)

2. பதான் (இந்தி)

3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (இந்தி)

4. லியோ (தமிழ்)

5. ஓஎம்ஜி 2 (இந்தி)

6. ஜெயிலர் (தமிழ்)

7. கதார் 2 (இந்தி)

8. தி கேரளா ஸ்டோரி (இந்தி) 

9. து ஜோதி மெயின் மக்கார் (இந்தி)

10. போலா (இந்தி)
 

 

 

Next Story

ரஜினியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

 

sivakarthikeyan in rajini 171

 

ரஜினிகந்த தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.