Skip to main content

விரைவில் ரஜினிக்கு சம்மன்... அடுத்த மாதம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

rajinikanth... opportunity to call for hearing next month

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு, காயம்பட்டவர்களைக் காணச்சென்ற நடிகர் ரஜினிகாந்த் ''போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்'' எனச் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன், விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சேகர் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், அடுத்த மாதத்திற்குள் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. மீண்டும் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.