/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RAJA33334.jpg)
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 13,610 ஆகவும், பல் மருத்துவப்படிப்புகளுக்கான (பி.டி.எஸ்) ஆண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 11,610 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவ மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கான டியூஷன் கட்டணம் ரூபாய் 30,000 ஆகவும், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூபாய் 20,000 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எஸ்.சி. நர்சிங் டியூசன் கட்டணம் ரூபாய் 3,000 ஆகவும், எம்.எஸ்.சி. நர்சிங் டியூசன் கட்டணம் ரூபாய் 5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பு தொடர்பாக, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)