Skip to main content

கொடைக்கானல், காஞ்சிபுரம், ஆம்பூரில் மழை!! 

காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. அதேபோல் திண்டுக்கல்லில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. திருப்பத்தூர், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது.

 

 Rain in Kanchipuram, Kodaikanal, Ambur !!

 

அதேபோல் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்