Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

nn

 

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அறிவிப்பின்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கடலூர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம், ஆத்தூர், பரனூர், வல்லம், வெண்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chance of rain in 4 districts

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அது மட்டுமின்றி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழைநீர் மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமின்றி பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

வடியாத வெள்ள நீர்; எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; வெளியான அப்டேட்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

nn

 

மிக்ஜாம் புயல் ஓய்ந்திருக்கும் நிலையில் சென்னையில் சில இடங்களில் இன்னும் நீர் வடியாத நிலை உள்ளது. இன்று முதல் எட்டாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம் போல நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய ஆறு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்