Skip to main content

ஆட்சியர் அலுவலகத்தை திணறடித்து மக்கள் கூட்டம்

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

 

pp

 


புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 16 அதிகாலை கஜா புயலின் கோர தாண்டவத்தால் வீடு, மரம், விவசாயம், அத்தனையும் இழந்து நிர்கதியாக நின்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் உதவிக்கு வந்தார்கள். அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.


 

இந்த நிலையில் தங்களின் வாழ்வாதாரம் மரங்களாக வீழ்ந்து கிடக்கிறது அதனால் விவசாயக் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அரசுகள் செவி சாய்க்கவில்லை. மாறாக ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டிய நிவாரணத்தை தற்போது கொடுத்து மக்களை போராட்டத்திற்கு இழுத்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், விவசாய கடன், உள்ளிட்ட கடன்களுக்கு தவனை செலுத்த ஒரு வருடம் கால நீடிப்பு செய்ய அறிவிப்பு வெளியிட்டார்.
 இன்று திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு வந்தால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. திடீரென இவ்வளவு கூட்டத்தை  எதிர்பார்க்காத போலீசார் கூட்டத்தை கட்டுப் படுத்த முடியாமல்  தினறி வருகின்றனர்.  ஏன் இவ்வளவு கூட்டம்? இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மட்டுமே அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் பரவியதால் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் இருக்கும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். மேலும் நிவாரணப் பொருட்கள் கிடைக்காத மக்களும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்துள்ளனர் என்றனர்.

 

 

 

 

 


   

சார்ந்த செய்திகள்